அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்

Published By: Ponmalar

10 Feb, 2023 | 01:04 PM
image

எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்த பின், அதன் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால் எலுமிச்சைச் சாற்றில் உள்ளது போலவே, அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. 

உச்சி முதல் பாதம் வரை, அழகைப் பராமரிப்பதில் எலுமிச்சைத் தோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கல்சியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. 

எலுமிச்சைத் தோலில் உள்ள சத்துக்கள், பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது. உடலில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், தோல், ஹோர்மோன் சுரப்பிகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும், சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது. 

ரத்தக்குழாய் சுவர்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் இதயம் சீராக இயங்கும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கின்றன. 

கரோட்டினாய்டு நிறமிகள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பிளேவனாய்டுகள் கெட்ட கொழுப்பைக் கரைக்கின்றன. 

அழகுக் குறிப்புகள்: 

1] எலுமிச்சம் பழத்தோலை குளிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து குளித்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். 

2] அக்குள் மற்றும் தொடையின் இடுக்குகளில், அதிக வியர்வையினால் பக்டீரியா தொற்று ஏற்பட்டு கருமை படர்ந்திருக்கும். அந்த இடங்களில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி, சில நிமிடங்கள் கழித்து எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் படிப்படியாகக் கருமை குறையும். 

3] எலுமிச்சைத் தோலில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முகப்பரு வராமல் தடுக்கிறது. எலுமிச்சைத் தோல், புதினா இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாகும். 

4] முகம், கை, காலில் இருக்கும் இறந்த செல்களை நீக்க எலுமிச்சைப் பொடியை உபயோகிக்கலாம். 3 டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடி, 3 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ரோஜா பன்னீர் இவை அனைத்தையும் பசை போல கலக்கவும். இதை முகம், கழுத்து மற்றும் உடலில் பூசி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து குளிக்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்யலாம். 

5] வீட்டில் மெனிக்யூர், பெடிக்யூர் செய்யும்போது எலுமிச்சைப் பொடியை சூடான தண்ணீரில் கலந்து கை மற்றும் கால்களில் பூசவும். 15 நிமிடம் கழித்து சுத்தம் செய்தால் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளிச்சிடும். 

6] எலுமிச்சை தோல் பொடி, மருதாணிப் பொடி ஆகியவற்றை கலந்து 'ஹேர் டை' தயாரித்தால் முடிக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெக்சிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

2023-03-24 13:48:39
news-image

சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மொய்ஸ்சுரைசர்

2023-03-17 14:59:33
news-image

எந்த காலமானாலும் சரி எந்த யுகமானாலும்...

2023-03-01 14:36:43
news-image

அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்

2023-02-10 13:04:52
news-image

உங்கள் சருமத்துக்கேற்ற பவுண்டேஷனை தெரிவு செய்யும்...

2023-02-03 17:21:13
news-image

'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்

2023-02-02 17:21:04
news-image

இளம் பெண்கள் ஏன் தாவணி அணிய...

2023-02-01 16:08:50
news-image

பெண்களுக்கு வாதத்தால் வரும் மார்பக வலி

2023-01-28 12:07:36
news-image

முக சுருக்கங்களை நீக்கும் ஃபேஸ் பெக்!

2023-01-27 16:04:55
news-image

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்

2023-01-26 17:25:55
news-image

சருமத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது எப்படி?

2023-01-26 12:40:30
news-image

மாதாந்திர வலி

2023-01-25 17:23:18