(எம்.மனோசித்ரா)
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் தாயின் இரண்டாவது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனது தாயின் இரண்டாவது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான 11 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சிறுவனின் தந்தை கடந்த புதனன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மாத்தளையைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 09 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் வியாழனன்று உயிரிழந்ததாக வைத்தியசாலை பொலிஸாரினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தக் கொலை தொடர்பில் இன்று (10) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM