ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியின் போலிப் பிரசாரங்களுக்குள் மக்கள் அகப்படக்கூடாது - நிமல் லன்ஷா   

Published By: Nanthini

10 Feb, 2023 | 12:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முடியாது என்று குறிப்பிட்டோம். இருப்பினும், நாட்டு மக்களே அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள். இறுதியில் நாங்களே அடிபட்டோம். 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் போலி பிரசாரங்களுக்குள் மக்கள் அகப்படக்கூடாது என அரசாங்கத்தில் இருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நிமல் லன்ஷா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்க உண்மைத்தன்மையுடன் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டத்தை முன்வைத்துள்ளார். 

நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி பொய்யுரைக்கவில்லை. நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவர் உண்மையை குறிப்பிட்டார். 

அரசியல் நோக்கத்துக்காக பிரபல்யமடையும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது.

கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் பிரபல்யமடைவதற்காக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடனாக பெற்று நிவாரண அடிப்படையில் வழங்கப்பட்டன.

இறுதியில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைத் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இதுவரை பொருளாதார மீட்சிக்கான கொள்கைத் திட்டங்களை முன்வைக்கவில்லை. மாறாக, குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நாட்டை வலம் வந்து தேர்தல் பிரசாரம் செய்துகொள்கிறார்கள்.

உழைக்காமல் எவ்வாறு சொகுசாக வாழ்வது என்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் வியாபாரம் ஏதும் செய்வதில்லை. தொழில் செய்வதில்லை. ஆனால், சொகுசாக வாழ்கிறார்கள். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிறரை 'திருடர்' என விமர்சிக்கிறார். ஆனால், அரசியல் பிரசாரங்களுக்காக கோடிக்கணக்கில் தற்போது நிதியை செலவிடுகிறார்.

நாட்டு மக்கள் தம்மை தெரிவு செய்வார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது செயற்படுகிறார்கள். 

அரசியல் பேரணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முடியாது என்று குறிப்பிட்டோம். ஆனால், நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினார்கள்.

இறுதியில் நேர்ந்தது என்ன? நாங்களே அடிபட்டோம். ஆகவே, மக்கள் விடுதலை முன்னணியின் போலி பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற்றமடையக்கூடாது.

போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள குழுவினர், சண்டியர்கள், சமூக விரோதிகள் தான் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளார்கள்.

மே 9 அன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களாக உள்ளார்கள். நாட்டு மக்கள் இவர்களையா தெரிவுசெய்யப் போகிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44