(ஆர்.ராம்)

மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை எந்த வகையிலும் குறைத்தவிடாது மேலும் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவித்துள்ளார்.

சிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் ஒரு சில மாகாண சபைகள் பொறுத்திருந்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள நிலையில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.