கென்னாபீஸ் எனப்படும் கஞ்சாவகை செடியை கொண்டு தமது நத்தார் மரத்தை அலங்கரித்திருந்த குற்றத்திற்காக இருவர் கைதான சம்பவம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

 இங்கிலாந்தின் ஜெல்டன்ஹாம் நகரப்பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வீட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வண்ணக் காகிதங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தை உன்னிப்பாக அவதானித்த பொலிஸார் அது அடர்த்தியாக வளர்ந்த கென்னாபீஸ் எனப்படும் கஞ்சா வகை போதை செடி என்பதை கண்டு பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டிலிருந்த இளம் தம்பதியினர் சட்ட விரோத கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்ததுடன், எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கஞ்சா செடியின் மூலமாக அலங்கரிக்கப்பட்ட நத்தார் மரத்தை சமுக வலைத்தளங்களில் பதிவுசெய்து, குறித்த மரம் தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளனர்.