சீனா தனது மேற்கு கடற்பகுதியில் முதன் முறையாக கடற்தள விமானப்படை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் சீன ஆக்கிரமிப்புகள் குறித்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் சீனா தனது கடற்படையை பலப்படுத்தியுள்ளது. அத்தோடு அண்மையில் அமெரிக்க தாய்வான் உறவுகள் வளர்க்கப்படுவது குறித்து விமர்சனங்களை தெரிவித்து வந்த சீனா திடீரென கடற்தள விமானப்படைகளுக்கு சொந்தமான டி – 15 பைடர் ஜெட் (fighter jets) விமானங்களை கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை ஆசிய பிராந்தியத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

மேலும் சில தினங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலை சிறைபிடித்த சீனா அமெரிக்காவின் பலத்த விமர்சனத்தைப் பெற்ற பின் அதனை விடுவித்தது.

அத்தோடு தற்போதைய பயிற்சிகளின் நோக்கம் மேற்கு மற்றும் கிழக்கு சீனக்கடல்களை மையப்படுத்துவதாய் இருப்பதால் பசுபிக் கடற்பிராந்தியத்தில் முறுகல்களை வளர்ப்பதற்கான சாத்தியங்களை அதிகமாகவே கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.