(ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி  ஊழலை ஆராய  கோப் குழுவுக்கு கொடுத்த வேலையை நாம் சரியாக செய்துவிட்டோம் . இப்போது பாராளுமன்றம் தனது கடமையை செய்ய வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப்போகின்றனரா? இல்லையா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியது.  அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கும் முதல் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய வங்கி ஊழல் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கையை விவாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியது. 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு  இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே கோப் குழுத் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹன்துன்நெத்தி மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.