தனுஷ் நடிக்கும் 'வாத்தி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

09 Feb, 2023 | 12:46 PM
image

னுஷ் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'வாத்தி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வாத்தி'. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், பிரவீனா, ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜே. யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 

கல்வித்துறையில் உள்ள முறைகேடுகள் குறித்தும், சமூகத்தில் நடக்கும் மோசடிகளை மையப்படுத்தியும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் நாகவம்சி தயாரித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 

முன்னோட்டத்தில் கல்வியை தனியார்மயப்படுத்துவதால் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி இலவசமாக இல்லாமல், கட்டணம் செலுத்தி பெறவேண்டிய கட்டாய சூழல் உருவாகும் என்பதையும், இதனை எதிர்த்து நாயகன் குரல் கொடுப்பதும் இடம்பெற்றிருக்கிறது. 

இதனால் இந்த முன்னோட்டத்துக்கு கல்வியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான நான்கு திரைப்படங்களில் 'திருச்சிற்றம்பலம்' எனும் ஒரேயொரு படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியை பெற்றது என்பதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் 'வாத்தி' திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையும் என்றும் திரையுலக வணிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right