கடந்த காலங்களை விட எதிர்காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்குத் தேவையான விடயங்களை அதிகமாக முன்னெடுக்கும் என காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி, அவர் வெவெத, ஹெரமிட்டிகல, ராசகல வெலேகுப்ரா, கபரகல உட்பட பல்வேறு தோட்டங்களிலும், பலாங்கொடை, இரத்தினபுரி உள்ளிட்ட நகரங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த பிரசாரங்களில் இ.தொ.காவின் உப தலைவர் ராஜாமணி, இரத்தினபுரி மாவட்ட அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் இரத்தினபுரி இரத்னேஸ்வரம் மற்றும் பலாங்கொடை முத்துமாரி அம்மன் ஆலயங்களில் இ.தொ.கா தலைவர் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM