இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளிற்கு தடையாகயிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்க தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
நான் வெற்றிபெறவேண்டுமா அல்லது தோல்வியடையவேண்டுமா என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
6.9 மில்லியன் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ரணில்விக்கிரமசிங்க இந்த நிலைமைய மாற்றினார் எரிபொருளுக்கான வரிசை உட்பட பல விடயங்களிற்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வை காணமுடிந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள் நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM