மலையகப் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ரணில் சொல்வதை எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம் - மனோ

Published By: Nanthini

08 Feb, 2023 | 04:52 PM
image

லையக மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். 

நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியாக பேச வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன். 

அதன் மூலம் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக மலையக தமிழ் மக்கள் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென நாம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எதிர்பார்க்கிறோம்.

இது இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து வெளிப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். 

இனி, இதை உரையுடன் நிறுத்திவிடாமல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறையில் செய்து காட்ட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடன உரை நிகழ்ந்தபோது நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் சபையில் பிரசன்னமாகி இருந்தோம். 

எம்முடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எதிரணி கட்சிகளின் எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகி இருந்தோம்.    

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரையை நேரடியாக எதிர்கொள்ளவே நாம் பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. 

பாராளுமன்றத்துக்கு செல்லாமல் உரையை பகிஷ்கரிப்பது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு எம்முடன் சேர்ந்து எடுக்கப்படவில்லை. ஆகவே, அதை பற்றி எமக்கு தெரியாது.

எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரை தொடர்பாக எமது கருத்துகளை நாம் பாராளுமன்றத்தில் வெளியிடுவோம். அதேவேளை, மலையக மக்களின் பல்வேறு  பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். 

இதை உரையுடன் நிறுத்திவிடாமல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறையில் செய்து காட்ட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:22:13
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23