(நா.தனுஜா)
அமைதிப்போராட்டங்கள் சடுதியாகத் தீவிரமடைந்து வன்முறையாக மாறக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்கப்பிரஜைகளுக்கு அந்நாட்டுத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பின் பல்வேறு பாகங்களிலும் இன்று (08) கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதகரம் அந்நாட்டுப்பிரஜைகளுக்குரிய பயண வழிகாட்டலில் மேற்குறிப்பிட்டவாறு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
கொழும்பில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் போராட்டங்களால் அதனை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாகலாம் அல்லது வீதிகள் மூடப்படலாம் என்று அவ்வழிகாட்டலில் குறிப்பிட்டுள்ள அமெரிக்கத்தூதரகம், அமைதிப்போராட்டங்கள் கூட சடுதியாகத் தீவிரமடைந்து வன்முறையாக மாறக்கூடும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது.
எனவே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையிலுள்ள அமெரிக்கப்பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் அந்நாட்டுத்தூதரகம், அத்தகைய பகுதிகளில் இருப்பவர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM