இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கும் மிர்ச்சி சிவா

Published By: Ponmalar

08 Feb, 2023 | 03:54 PM
image

நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

'கற்றது தமிழ்' , 'தங்க மீன்கள்', ' தரமணி', 'பேரன்பு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகை கிரேஸ் அண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

என். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இளைய இசை ஞானி யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

டார்க் ஹுயுமர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக நடிகரும், இயக்குநருமான ராம், செவன் சீஸ் செவன் ஹில்ஸ் எனும் புதிய பட நிறுவனத்தை தொடங்கி, அதனூடாக தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், இந்த திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகரும், இயக்குநருமான ராம், தற்போது மலையாளத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right