தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரி இடம்பெற்ற "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தினர் நீதிமன்றத்தின் அழைப்பாணை பெற்று வழங்கியுள்ளனர்.
அந்தவகையில் தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரி இடம்பெற்ற "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கத்தின் தலைவர் தவத்திருவேலன் சுவாமிகள் அவர்களுக்கான அழைப்பாணை இன்று (08) மதியம் ஒரு மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டது.
சிவில் உடையில் வந்த பொலிஸாரே இவ் அழைப்பாணையை வழங்கினர் எனவும் வழக்கு விசாரணைகளுக்கு 20/02/2023 அன்று அழைக்கப்பட்டுள்ளேன் என சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM