'ஹரக் கட்டா' உள்ளிட்ட 3 பாதாள உலகக்குழுவினரை இலங்கைக்கு அழைத்துவர டுபாய் செல்லும் பொலிஸ் குழு!

Published By: Vishnu

08 Feb, 2023 | 02:52 PM
image

தென்னிலங்கையின் சக்திவாய்ந்த பாதாள உலகக்குழு செயற்பாட்டாளரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான நந்துன் சிந்தக என்றழைக்கப்படும் 'ஹரக் கட்டா' உள்ளிட்ட மூன்று பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு அழைத்துவர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் குழுவொன்று டுபாய் செல்லவுள்ளது.

ஹரக் கட்டாவுக்கு மேலதிகமாக ஷிரான் பாசிக் மற்றும் அசங்க ஆகியோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இந்த பொலிஸ் குழு இன்று (08) அல்லது நாளை (09)  புறப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூவருக்கும் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிம்புலா எல குணா உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியங்கர ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22