முன்னாள் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரள கொலை : சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாய் புற்றுநோயினால் உயிரிழப்பு!

Published By: Digital Desk 3

08 Feb, 2023 | 02:16 PM
image

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  அமரகீர்த்தி அத்துகோரளவை கடந்த மே மாதம் 9ஆம் திகதி தாக்கிக் கொலை செய்தார் என்ற  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் மஹரகம புற்று நோய்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ எல்லக்கல பிரதேசத்தை சேர்ந்த ஹெந்தவிதாரண நிபுண புத்திக என்ற 26 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரகசிய பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு  மஹர விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

புற்று நோயினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மஹர சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40