தந்தையும், 12 வயது மகளும் நீரில் மூழ்கி பலி ; செல்ஃபி எடுக்க முயன்ற போது சம்பவம்

Published By: Digital Desk 3

08 Feb, 2023 | 02:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பொலன்னறுவை - புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கும்புக்கனாவுற ஓயாவில் தவறி விழுந்து நேற்று (பெப் 07) தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புலஸ்திபுர, ஒனேகம பிரதேசத்தில் கும்புக்கனாறுவ ஓயாவில்  தவறி விழுந்து 46 வயதுடைய நபரும் அவரது 12 வயது மகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பிரதேசவாசிகள், பொலிஸார், கடற்படையினரும் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் வீழ்ந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையும் மகளும் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது ஆற்றில் தவறி விழுந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 46 வயதுடைய நபர் ஒனேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22