சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 14 வயது சிறுவன் கைது

Published By: Digital Desk 5

08 Feb, 2023 | 01:46 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த அவரது 14 வயதுடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (பெ்ப 07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்தறை தெற்கு, தேகாவத்தை பலதொட்ட பிரதேசத்தில் 26 வயதுடைய சகோதரனை கொலை செய்த 14 வயது சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இரு  சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி 14 வயதுடைய சிறுவன் தனது மூத்த சகோதரனை கத்தியால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களது தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அவரை பார்க்க  தந்தை  சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய  தேக்கவத்தை, பலதொட்ட பகுதியைச் சேர்ந்தவராவார்.இக்கொலை தொடர்பாக அவரது 14 வயது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59