ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்த முடியும் - அமைச்சர் டக்ளஸ்

Published By: Digital Desk 5

08 Feb, 2023 | 01:11 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை பேயை போலவும்,சிங்கள மக்கள் சமஷ்டி ஆட்சியை பிசாசை போலவும் பார்க்கிறார்கள்.

முன்வைக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தை முழுமையாக செயற்படுத்தினால் அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியும்.

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகார பகிர்வை சாத்தியப்படுத்த முடியும் என கடற்றொழில் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து ஊடகஙகளுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  அக்கிராசன உரை வரவேற்கத்தக்கது.நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் அடிப்படை  பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி விசேட் கவனம் செலுத்தியுள்ளார்.

முன்வைத்த கொள்கை திட்டத்தை முழுமையாக பின்பற்றினால் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விசேட பொறிமுறைகள் கொள்கை த் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சியா அல்லது சமஷ'டியாட்சியா என்பது தற்போதைய பிரச்சினையல்ல,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தற்போதைய பிரதான இலக்காக கருத வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமையை தமிழ் மக்கள் பேயை போலவும்,சமஷ்டி ஆட்சி முறைமையை சிங்கள மக்கள் பிசாசை போலவும் கருதுகிறார்கள்.

இரு தரப்பினரும் முரண்பட்டுக் கொண்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.இணக்கப்பாட்டுடனான பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வை சாத்தியமாக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:22:13
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:21:10
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23