மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளது

Published By: Ponmalar

08 Feb, 2023 | 12:05 PM
image

மக்கள் வங்கி இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திரத்தை தனது தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு எளிமையான நிகழ்வில் கொண்டாடியதுடன், அதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் ஆரம்பிக்கப்படும் மக்கள் வங்கியின் ‘சுதந்திரத்தின் பிறப்பு’(Birth of Freedom) நிகழ்ச்சித்திட்டம் இந்த வருடமும் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கருப்பொருளின் கீழ், பெப்ரவரி முதலாம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூபா. 2,000/- பெறுமதியான ‘இசுறு உதான’ பரிசுச் சான்றிதழை மக்கள் வங்கி அன்பளிப்பாக வழங்குகிறது.

மக்கள் வங்கியானது 2006 ஆம் ஆண்டு தேசிய பெருமையை ஊட்டுதல் மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை திட்டமிட பெற்றோர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த திட்டத்தை ஆரம்பித்தது. பரிசுச் சான்றிதழைப் பயன்படுத்தி எந்த மக்கள் வங்கிக் கிளையிலும் பெற்றோர்கள் ‘இசுறு உதான’ சிறுவர் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோர் ‘இசுறு உதான’ பரிசு வவுச்சர்கள் மற்றும் பிற பரிசுகளை பொரளையில் உள்ள காசல் வீதி மகப்பேறு மருத்துவமனை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் அடையாளமாக வழங்கி வைத்தனர்.

காசல் வீதி மகப்பேறு மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தந்தநாராயண, பொரளை டி சொய்சா மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (பரிவர்த்தனை வங்கிச்சேவை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்) ரொஹான் பத்திரகே, பிரதிப் பொது முகாமையாளர் (சில்லறை வங்கிச்சேவை) ரேணுகா ஜயசிங்க, பிரதிப் பொது முகாமையாளர் (மூலோபாய திட்டமிடல், செயல்திறன் முகாமைத்துவம் மற்றும் ஆராய்ச்சி) ஜயந்தி குருகுலசூரிய, பிரதிப் பொது முகாமையாளர் (இடர் முகாமைத்துவம்) ரோஷினி விஜேரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் (வங்கி ஆதரவு சேவைகள்) நிபுனிகா விஜயரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் (வழங்கல் மார்க்க முகாமைத்துவம்) டி.எம்.டபிள்யூ சந்திரகுமார, சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜயவர்தன, உதவிப் பொது முகாமையாளர் (சில்லறை வங்கிச் சேவை) நளின் பத்திரணகே, உதவிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) மஞ்சுளா திஸாநாயக்க, கொழும்பு வடக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.எல்.எம்.ஏ.எஸ். சமரதுங்க, கொழும்பு தெற்கு பிராந்திய முகாமையாளர் எம்.எஸ்.கனக ஹேவகே, பொரளை கிளை முகாமையாளர் டபிள்யூ.ஏ.என். உதயாங்கனி, நகர மண்டப கிளை முகாமையாளர் திரால் பிரதீப், பொரளை டி சொய்சா மகளிர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர். கே.எம் நிஹால், காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி எஸ்.எம்.டி.ஏ.ஆர். பண்டார, தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேற்கூறியவற்றிற்கு இணங்க நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் ‘சுதந்திரத்தின் பிறப்பு’ (Birth of Freedom) திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருநாள் ஊடக பயிற்சிப்பட்டறை

2023-03-24 14:57:23
news-image

இயற்கையும் புதுமையும் கலையும் கலந்த 'இன்னொரு...

2023-03-24 12:28:14
news-image

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு!

2023-03-24 13:49:34
news-image

நல்லூர் நீர்வள உரையாடல்

2023-03-24 13:47:47
news-image

சிலுவைப்பாதை

2023-03-24 10:07:29
news-image

உலக காசநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு...

2023-03-23 16:54:12
news-image

சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின்...

2023-03-23 15:38:21
news-image

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும்...

2023-03-23 16:36:26
news-image

இராகலையில் அகவை பூர்த்தி விழாவும் மலர்...

2023-03-23 16:07:35
news-image

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முப்பெரும்...

2023-03-22 17:23:59
news-image

நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய...

2023-03-22 17:03:57
news-image

உலக நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு...

2023-03-22 15:44:32