வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி

Published By: Nanthini

08 Feb, 2023 | 12:20 PM
image

நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் இன்று (8) காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெற்றோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. 

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்துக்கு ஆதரவளித்து, 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலய பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில பிரிவுகளில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன், வெளிநோயாளர் பிரிவு, க்ளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக க்ளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றுக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46