தொண்டையில் கிச்...கிச்.... தொந்தரவா.....?

Published By: Ponmalar

08 Feb, 2023 | 12:18 PM
image

பருவ காலம் மாறும்போதும், புதிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள தண்ணீர் குடிக்கும்போதும், அங்குள்ள தட்பவெப்ப நிலை காரணமாகவும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதை குணப்படுத்த உதவும் சித்தமருந்துகள் பற்றி பார்ப்போம்: 

ஆடாதோடை இலை 2, மிளகு 5, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். 

சாம்பார் வெங்காயம் 5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும். 

பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். 

முட்டையை ஆஃப் பொயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். 

சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். 

பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும். வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். 

தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04