மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அரச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி நேற்று (7) செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.
எக்ஸத் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இப்பேரணி சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு - கொழும்பு வீதியினூடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை அடைந்தது.
அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முகவரியிடப்பட்ட மகஜரினை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் ஹமீட்டிடம் பேரணி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.
இந்த பேரணியில் கலந்துகொண்டோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெறும் அரச பயங்கரவாதத்தினை உடனடியாக நிறுத்தல், மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் எல்லை பிரச்சினை, மீள்குடியேறிய காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளாமை போன்றவற்றை வலியுறுத்தி, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓர் அதிகாரியை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். நாங்கள் முஸ்லிம்களின் உரிமைகள் கிடைக்காமல் தடுக்கும் அதிகாரிகளை மாற்றி பக்கசார்பில்லாத அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை வைப்பதுடன், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM