துருக்கி நாட்டுக்காக வேலைவாய்ப்பு நேர்முகப் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற அமைதியின்மைக்கான காரணம் என்ன?

Published By: Digital Desk 5

08 Feb, 2023 | 01:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

துருக்கி நாட்டுக்கான வேலைவாய்ப்புக்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2,650 வேலைவாய்ப்பு தனிப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு  கிடைக்கப்பெற்றதாகும். அத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதியுடனே அதற்கான நேர்முகப்பரீட்சையும் இடம்பெற்றது. 

என்றாலும் இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் செய்தியால் நேர்முக தெரிவு இடம்பெற்ற இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தினால் அனுமதிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களின் தலைவர் பாருக் மரிக்கார் தெரிவித்தார்.

துருக்கி நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக கொழும்பில் இடம்பெற்ற நேர்முக தேர்வின்போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தினால் அனுமதிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படிருந்து செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பு மருதானையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

துருக்கி நாட்டுக்கு இலங்கையர்கள் 2,650 பேருக்கு வேலைவாய்ப்புக்கான அனுமதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நியூ ஏசியா ட்ரவல்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. குறித்த நிறுவனம் அதற்காக நேர்முகப்பரீட்சையை நடத்தி துருக்கி நாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான அனுமதியை பணியகம் வழங்கி இருந்தது.  ஊடகங்களில் அது தொடர்பில் விளம்பரப்படுத்தியதன் பிரகாரம் மருதானை புக்கர் மண்டபத்தில் தொடர்ந்து 3 முறை நேர்முகப்பரீட்சை நடத்தி 900பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இறுதித் தேர்வு கடந்த மாதம் 25ஆம் திகதி ஜயவர்த்தனபுர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அந்த இடத்துக்கு திடீரென ஆயிரக்கணக்கானவர்கள் நேரமுகப்பரீட்சையில் கலந்துகொள்வதற்கு என அங்கு வந்திருந்தனர். சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டிருந்த போலி தகவலை அடிப்படையாக்கொண்டே இவர்கள் அங்கு வந்திருந்திருந்தனர். 

குறிப்பாக துருக்கி நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக, அரசாங்கத்தினால் இலவசமாக அனுப்பிவைக்கப்படுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த நடவடிக்கையை குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையாகும் என்றார்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த நியூ ஏசியா ட்ரவல்ஸ் முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் என்.பீ.டீ. ஜப்பார் குறிப்பிடுகையில், துருக்கி நாட்டுக்கான வேலைவாய்ப்பு எனது நிறுவனத்துக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைக்கப்பெற்றதாகும். இதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வேலைவாய்ப்பு இலவசமானது அல்ல. ஒரு தொகை பணம் அறவிடுகிறோம். என்றாலும் சமூக வலைத்தலங்களில் மருதானை புக்கர் மண்டபத்தில் நேர்முகப்பரீட்சை இடம்பெறுவதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியாயின் ஏன் இவர்கள் ஜயவர்த்தனபுர மண்டபத்துக்கு வரவேண்டும் என்றே நான் கேட்கின்றேன்.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்து விளம்பரங்கள் கிடைக்கப்பெற்றால், அது தொடர்பான உண்மை நிலையை அறிந்துகொள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989க்கு அழைப்பு விடுத்து குறித்த முகவர் நிறுவனத்தின் அனுமதி இலக்கத்தை தெரிவித்து, அறிந்துகொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக எந்த முகவர் நிறுவனங்களுக்கும் பணம் வழங்கி யாரும் மாட்டிக்கொள்ளக்கொள்ள வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56