(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் தலைமையிலான அணியும் இன்று (பெப் 08) ஆரம்பமாகவுள்ள பாராளுன்ற கூட்டத்தை தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்காமலிருக்க தீர்மானித்துள்ளது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியுடன், கூட்டணி அமைத்துள்ள அதிகமான பங்காளிக் கட்சிகள் இந்த ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்காத போதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் நடத்தப்படும் இரண்டு நாள் விவாதத்திற்கு பங்கேற்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை தொடர்பான விவதாம் 9ஆம், 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று காலை 10மணிக்கு ஆரம்பித்து வைக்க இருக்கிறது. என்றாலும் இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையிலேயே நடத்துமாறு ஜனாதிபதி ஆலாேசனை வழங்கியதன் பிரகாரம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் பாேது கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாய பல நிகழ்வுகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன். குறிப்பாக இராணுவ அணிவகுப்பு மரியாதை, மரியாதை வேட்டுக்கள் நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM