வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின் படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பு என தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு

Published By: Sethu

07 Feb, 2023 | 05:56 PM
image

 வியட்நாம் யுத்தத்தின்போது, வியட்நாமில் தென் தென்கொரிய படையினரால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு  இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் தென் கொரிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

1960கள் மற்றும் 1970களில் கம்யூனிஸ வடக்கு வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தின்போது, அமெரிக்கப் படையினருக்கு உதவுவதற்காக தென் கொரியா தனது படையினரை வியட்நாமுக்கு அனுப்பியது

இந்த யுத்தத்தின்போது, 1968 பெப்ரவரி 12 ஆம் திகதி வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்திலுள்ள போங் நி நகரில் நடந்த முற்றுகையொன்றின்போது, 70 பொதுமக்களை படையினரை கொலை செய்ததாக தென் கொரிய படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இப்படுகொலைகளில் உயிர்தப்பிய, என்குயென் தி தான்ஹ் எனும் வியட்நாமிய பெண்ணொருவரால், தென் கொரியாவின் சோல் நகரிலுள்ள மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் தென் கொரிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நீதிமன்றம்  நேற்று செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தது. மேற்படி படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய நீதிமன்றம்,  இப்படுகொலைகளுக்காக 30 மில்லியன் வொண் (சுமார் 87 லட்சம் இலங்கை ரூபா) இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது.

தற்போது 62 வயதான தான்ஹ், மேற்படி முற்றுகையின்போது காயமடைந்ததுடன், தனது தாய் உட்பட குடும்ப அங்கத்தவர்களை இழந்திருந்தார். தென் கொரிய அரசிடம் இழப்பீடு கோரி 2020 ஆம் ஆண்டு அவர் வழக்கு தொடுத்தார்.

1968 ஆம் ஆண்டின் படுகொலைகளின் சாட்சியாளர்கள், இச்சம்பவம் தொடர்பாக செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.

தீர்ப்பின் பின்னர்,  சியோல் நகரிலுள்ள ஊடகவியலாளர்களிடம் வீடியோ மூலம் உரையாடும் தி தான்ஹ். (AFP Photo)

இக்கொலைகளுக்கு தென் கொரிய படையினர் காரணம் என்பதை நிரூபிப்பது கடினம் என தென்கொரிய அரசாங்கம் வாதாடியது.

எனினும், வழக்காளியான வியட்நாமிய பெண்ணுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென் கொரியாவுக்கும் தென் வியட்நாமுக்கும் இடையில் 1965 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையினால், சட்டபூர்வ பொறுப்புகளிலிருந்து தென் கொரிய படையினருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா அரசாங்கம் கூறியது.

எனினும், அந்த உடன்படிக்கையானது பாதிக்கப்பட்ட வியட்நாமிய தனிநபர்கள் இழப்பீடு கோருவதை தடுக்க மாட்டாது எனவும் தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழக்காளியான என்குயென் தி தான்ஹ், தீர்ப்பின் பின்னர்,  சியோல் நகரிலுள்ள ஊடகவியலாளர்களிடம் வீடியோ மூலம் உரையாடியபோது, இத்தீரப்பை தான் வரவேற்பதாக கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05
news-image

தாய்லாந்தில் ஆஸி தூதரக பெண்கள் கழிவறையில்...

2023-03-23 14:24:40
news-image

தென் சீனக் கடலிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலை...

2023-03-23 13:36:05
news-image

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2...

2023-03-23 12:37:28
news-image

மோடி என்ற பெயர் பற்றி அவதூறு...

2023-03-23 11:45:38
news-image

கனேடிய சனத்தொகை ஒரு வருடத்தில் முதல்...

2023-03-23 11:42:05
news-image

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பொது இடங்களில்...

2023-03-23 11:25:14
news-image

உக்ரைன் போலந்து எல்லைக்கு இளவரசர் வில்லியம்...

2023-03-23 09:58:40
news-image

3D அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட முதல்...

2023-03-23 10:46:39
news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01