நெருக்கடிகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆதரவினை வழங்க வேண்டும் - ஆர்.  யோகராஜன்   

Published By: Nanthini

07 Feb, 2023 | 10:25 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இ.தொ.கா. பயணிப்பது தொடர்பான அறிவிப்பினை தெரியப்படுத்தவும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்றைய தினம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன், இ.தொ.கா இணைந்து பயணித்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் மலையகத்தில் 6 தேர்தல்கள் தொகுதிகளில் இணைந்தும், ஏனைய பகுதிகளிலும் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் இ.தொ.கா.வின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 

மேலும் இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலரும் எம்முடன் இணைந்து போட்டியிடுகிறார்கள்.

மேலும் கொழும்பு மாநகர சபை என்பது  ஐக்கிய தேசிய கட்சிக்கு சொந்தமானது. கொழும்பு தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்படுகிறது. 

இந்நிலையில் இந்த கோட்டையின் அதிகாரத்தை மீளவும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நாம் தற்பொழுது இணைந்துள்ளோம். 

2004ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இ.தொ.கா இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம்  பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி அதிகாரத்தை மேலும் பலப்படுத்த முடியும்.  

நாட்டின் எல்லா சமூகத்தினரும் இன ஒற்றுமையுடன் ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுகிறது. அவரது கனவை நனவாக்க வேண்டும் என்றால் அவருக்கு நாம் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறவும், அரசாங்கத்தின் கட்சிகள் மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடியவர்கள் கட்டாயம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டு சர்வதேச நாடுகளுடைய உதவிகள் கிடைக்கப்பெறாமல் போனால், நாட்டுக்கு பாரியதொரு இழப்பு ஏற்படும் என்பதை மனதில் கொண்டு எல்லோரும் செயல்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56