பதுளை - ஹாலிஹெல மத்திய மகா வித்தியாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற லொறி விபத்தில், பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

நுவரெலியாவிலிருந்து பதுளைக்கு பயணத்த லொறியனாதுஇ வீதியை விட்டு விலகிச் சென்று மேற்படி பாடசாலைக்கு அருகிலுள்ள மின்சார தூணில் மோதியுள்ளதுடன்இ பாடசாலையின் பாதுகாப்பு மதிலுக்கு கீழே படுத்துறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மீதும் மோதிஇ தரித்து நின்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த பெண் இதுவரை அடையாளங்காணப்படவில்லை எனவும், இவரது சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர். 

சாரதியின் நித்திரைக்கலக்கமே இவ்விபத்துக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.