முறை சார்ந்த மீளாய்வு மூலம் அரச செலவினங்களை சீரமைக்க நடவடிக்கை

Published By: Nanthini

07 Feb, 2023 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ரச செலவினங்களை சீரமைக்கும் நோக்கில் பூஜ்ஜிய நிலை அடிப்படையிலான வரவு - செலவுத் திட்ட முறையை அறிமுகப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதியால் 2023ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜிய நிலை அடிப்படையிலான வரவு - செலவுத் திட்ட முறையின் கீழ் முறை சார்ந்த மீளாய்வு மூலம் செலவிடும் வேலைத்திட்டங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறல், வீண்விரயம், குறைந்த முன்னுரிமைகளுடன் கூடிய செயற்பாடுகள் மற்றும் தற்போது நிலவுகின்ற நிதி ஒதுக்கீட்டுப் பயன்பாட்டுக்கான வினைத்திறனானதும் உற்பத்தித்திறன் மிக்கதுமான முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, வருடாந்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் அதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் கீழ்க்காணும் 10 அமைச்சுக்கள் தொடர்பான முறை சார்ந்த மீளாய்வை மேற்கொள்வதற்காக பிரதி திறைசேரி செயலாளர் அல்லது திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியின் தலைமையில் 10 அதிகாரிகள் குழுக்களை நியமிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றுக்காக குறித்த அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39