அரசாங்கம் தேர்தலைக் கண்டு அச்சமடையும் போது எவ்வாறு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது - சரித ஹேரத்

Published By: Nanthini

07 Feb, 2023 | 04:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சமடையும் போது எவ்வாறு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.

நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் சூழல் காணப்படுவதை பல்வேறு காரணிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், சர்வதேச நாணய நிதியம் மற்றும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஆகிய விடயங்கள் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றன. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளபோது தேர்தலை பிற்போட பல்வேறு சூழ்ச்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறது.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. தேர்தல் ஊடாகவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

இந்த அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து ஓடுகின்ற நிலையில் எவ்வாறு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

13ஆவது திருத்தம் தொடர்பில் வெளி தரப்பினரது கருத்துக்களை கோர முன்னர் பிரதமரிடமும், பொதுஜன பெரமுனவிடமும் நிலைப்பாட்டை கோர வேண்டும்.

1989ஆம் ஆண்டு இன ரீதியான முரண்பாடுகள் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மாவட்டத்தில் 375 பேருக்கு ஆசிரியர்...

2024-05-26 11:48:38
news-image

பலத்த காற்றினால் பதுளை மாவட்டத்தில் 114...

2024-05-26 11:27:07
news-image

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உடைந்துபோன பாலத்தில்...

2024-05-26 11:29:32
news-image

கணவருக்கு விஷத்தை கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில்...

2024-05-26 11:18:41
news-image

பக்கச்சார்பானது; குறைபாடுடையது - ஐ.நா. மனித...

2024-05-26 10:53:24
news-image

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பொதுவெளியில்...

2024-05-26 10:50:30
news-image

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி 

2024-05-26 10:31:50
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை...

2024-05-26 10:43:10
news-image

ஜனாதிபதி தலைமையில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள்...

2024-05-26 10:31:19
news-image

13ஐ அமுல்படுத்துவதற்கு தாதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுங்கள்...

2024-05-26 09:52:28
news-image

தமிழ் வேட்பாளரை நிறுத்தும் ஒற்றுமை தமிழ்...

2024-05-26 08:01:56
news-image

ஹப்புத்தளையில் வீட்டின் மீது மரம் முறிந்து...

2024-05-26 07:55:58