அமெரிக்காவின் பவர்போல் லொத்தர் சீட்டிழுப்பில் 757 மில்லியன் டொலர் (27,605 கோடி இலங்கை ரூபா, 6238 கோடி இந்திய ரூபா) பரிசை வென்றுள்ளார்.
வொஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே இப்பரிசை வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சீட்டிழுப்பில் ஜக்பொட் பரிசுக்கான 05,11,22,23,69 மற்றும் 07 ஆகிய வெற்றி இலக்கங்கள் மேற்படி நபரின் லொத்தர் சீட்டுடன் பொருந்தியுள்ளன.
இபபரிசை வென்றவர் ஒரே தடவையில் 407.2 மில்லியன் டொலர்களைப் பெறலாம். அல்லது 29 வருடகாலத்தில் தவணை முறையில் 754 மில்லியன் டொலர்களைப் பெறலாம்.
ஆமெரிக்காவின் பவர்போல் லொத்தர் வரலாற்றில் வெல்லப்பட்ட 5 ஆவது அதிகூடிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும்.
நேற்று இரவுக்கு முன்னர் இறுதியாக 2022 நவம்பர் 19 ஆம் திகதி பவர்போல் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது.
அப்போது கான்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 92.9 மில்லியன் டொலர்களை வென்றிருந்தார்.
அதன்பின் பல வாரங்களாக ஜக்பொட் பரிசு வெல்லப்படாததால் அதன் பெறுமதி அதிகரித்து வந்தது.
நேற்றிரவு ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டதால், நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 20 மில்லியன் டொலர்களாக (732 கோடி இலங்கை ரூபா, 166 கோடி இந்திய ரூபா) குறைவடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM