பதுளை - தல்தென பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 1,500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

“ஈஷி கேஸ்” பண பரிமாற்றத்தினூடாக குறித்த நபர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“ஈஷி கேஸ்” பண பரிமாற்றத்தினூடாக பணத்தை பெற்றுக்கொண்டு, ஹெரோயின் போதைப்பொருளை ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து வைத்து, குறித்த தகவலை பெற்றுக்கொள்பவரிடம் அறிவித்தவாறு விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்  பதுளை அந்தெனிய பகுதியைச் சேர்ந்த “குடு பூத்தையா” (24) என  அழைக்கப்படுபவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.