ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

Published By: T. Saranya

07 Feb, 2023 | 04:01 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (பெப் 06) ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொடவில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில்  காலி - மாத்தறை பிரதான வீதியின் விஜய் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில்  மாத்தறையில் இருந்து கண்டியில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த கார் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 37 வயதுடைய உடகொதர, கம்புருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

அதேவேளை, வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில்  வெல்லவாய பிரதேசத்தில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 37 வயதுடைய பொதுப்பிட்டிய, தல்விட பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களுக்கு எதிரான கலாசார ரீதியிலான இனவழிப்பில்...

2023-03-29 21:27:05
news-image

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு 'செயற்திட்ட விளக்கம்'...

2023-03-29 21:26:20
news-image

எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளமைக்கு...

2023-03-29 21:15:54
news-image

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை...

2023-03-29 21:14:45
news-image

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் ஊழியர்களை பணியிலிருந்து...

2023-03-29 21:22:33
news-image

மக்களின் நலன் கருதி எரிபொருள் விலைகள்...

2023-03-29 21:25:24
news-image

பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலிக்காக ஜோசப் மைக்கல்...

2023-03-29 21:33:51
news-image

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் போராட்டம்

2023-03-29 21:32:47
news-image

பஸ் கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைப்பு...

2023-03-29 21:30:55
news-image

உயிர்த்தஞாயிறு தாக்குதல் - சாரா ஜஸ்மின்...

2023-03-29 21:20:10
news-image

வெடுக்குநாறி விவகாரம் - விசாரணை நடத்தி...

2023-03-29 15:16:04
news-image

ரணில் - ராஜபக்ஷர்கள் எதிர்கால அரசியலில்...

2023-03-29 12:19:10