இருபதுக்கு 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி

Published By: Vishnu

07 Feb, 2023 | 03:35 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் இன்னும் 3 தினங்களில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை மகளிர் அணி, தனது ஆரம்பப் பயிற்சிப் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை 2 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

கடைசிவரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் கடைசி ஓவரில் அயர்லாந்தின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் இலங்கையின் வெற்றிக்கு 2 விக்கெட்கள் வீழ்த்தப்பட வேண்டி இருந்தது.

கடைசி ஓவரை மிகவும் துல்லியமாக வீசிய வேகப்பந்து வீச்சாளர் சுகந்திகா குமாரி ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்ததுடன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அவரது ஓவரின் 5ஆவது பந்தில் அயர்லாந்தின் கடைசி விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட, இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

ஹர்ஷித்தா சமரவிக்ரம, அணித் தலைவி சமரி அத்தப்பத்து ஆகிய இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து   ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சமரி அத்தப்பத்து 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் ஹர்ஷிதாவுடன் ஜோடி சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அணித் தலைவி விஷ்மி குணரட்ன பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஹர்ஷிதா உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார். 46 பந்துகளை எதிர்கொண்ட ஹர்ஷிதா 7 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து விஷ்மி குணரட்ன 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். அனுஷ்கா சஞ்சீவனி 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அயர்லாந்து பந்துவீச்சில் லோரா டிலேனி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அயர்லாந்து துடுப்பாட்டத்தில் கெபி லூயிஸ் 38 ஓட்டங்களையும் ஆர்லின் கெலி 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் ஓஷாதி ரணசிங்க 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இனோக்கா ரணவீர 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை தனது 2ஆவது பயிற்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை புதன்கிழமை (08) எதிர்த்தாடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45