(எம்.வை.எம்.சியாம்)
நாடு பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அதில் இருந்து மீட்சி பெற ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு முழு ஆதரவினை வழங்கும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட தீர்மானித்துள்ளது.
மேலும் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதே இலக்கு என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (7) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
கொழும்பில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு பல காணப்படுகின்றன.
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக செயற்படுவார்.
நாடு கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்று, சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வர ஜனாதிபதி மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவருடைய கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கலாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏகமனதாக கூடி தீர்மானித்திருந்தது.
அதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் எமது கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து போட்டியிடுகிறார்கள்.
மேலும் மலையகத்தில் பல பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் இணைந்து போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் அனைவரும் புரிந்துணர்வுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகரமாக முகங்கொடுக்கவுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவதோடு, ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அவருக்கு இது உந்து சக்தியாக அமையும் என்றும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அதணை வெற்றிக்கொள்ள முடியும் என்றும் நம்புகிறோம்.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கணிசமான வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவே எமது இலக்கு. அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் வலுவடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM