யோகி பாபு நடிக்கும் 'லக்கி மேன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

07 Feb, 2023 | 03:17 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு :லக்கி மேன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், சாம் அண்டன், அஸ்வின் சரவணன், இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகமாகி பிரபலமான பாலாஜி வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'லக்கி மேன்'. இதில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் பாலாஜி, வீரா, அப்துல் லீ, ரேச்சல் ரபாகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்திப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபுவின் தோற்றமும், அவரது சேர்ட்டில் அர்த்தமுள்ள வகையில் எல் (L) என்ற ஆங்கில எழுத்து இடம்பெற்றிருப்பதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35