அழுது கொண்டே கதை கேட்ட அபர்ணா தாஸ்

Published By: Ponmalar

07 Feb, 2023 | 02:52 PM
image

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழும் இவர் விரைவில் தமிழில் வெளியாகவிருக்கும் 'டாடா' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதையை அவர் கேட்டபோது கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக அவர் விளக்கமளிக்கையில், “தமிழிலும் மலையாளத்திலும், நடித்திருந்தாலும் எம்மை கவர்ந்த நட்சத்திரங்கள் நிறைய இருப்பதால் யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. 'டாடா' படத்தில் நடிகர்களை விட இசையமைப்பாளர் ஜென் மாட்டினின் பங்களிப்பு அதிகம். இந்தப் படத்திற்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன்.

இயக்குநர் கணேஷ், கேரளத்திற்கு வருகை தந்து எம்மை சந்தித்து, 'டாடா' படத்தின் கதையை சொல்லத் தொடங்கினார். கதையை கேட்கும் போது பல இடங்களில் எம்மையும் மீறி கண்களில் கண்ணீர் வந்தது. பிறகு இடைவேளை என்று இயக்குநர் சொன்ன போது அதிர்ந்தேன். ஏனெனில் முதல் பாதியில் ஏராளமான விடயங்கள் இடம்பெற்றிருந்தது. கதையின் நாயகிக்கு பல இடங்களில் உணர்வு பூர்வமாக நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. பிறகு கதையை முழுவதும் கேட்டு முடித்த பிறகு இதில் நான் நடிக்கிறேன். ஆனால்...! என்று இழுத்தேன். இந்த கதாபாத்திரத்தை எம்மால் சுமக்க இயலுமா? என்ற சிறிய தயக்கம் இருந்தது. அதனை உணர்ந்த இயக்குநர் கணேஷ், உங்களால் முடியும் என தன்னம்பிக்கை அளித்தார். அதன் பிறகே இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.” என்றார்.

திரையுலகில் கதையே கேட்காமல்... சம்பளம், உதவியாளர்களுக்கான ஊதியம், தங்குமிடம், கேரவன்.. என  வசதிகளையும், சௌகரியங்களையும் மட்டுமே முதன்மையாக முன்னிறுத்தும் நட்சத்திர நடிகைகளின் மத்தியில்..., கதையை முழுவதுமாக கேட்டு, அதையும் உணர்வு பூர்வமாக கேட்டு, கண்ணீர் விட்ட நடிகை அபர்ணா தாசின் நடவடிக்கையை திரையுலக படைப்பாளிகள் வரவேற்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18
news-image

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' பட ஃபர்ஸ்ட்...

2024-04-10 13:13:42
news-image

உதைபந்தாட்ட பயிற்சியாளரின் வாழ்வியலை பேசும் 'மைதான்'

2024-04-10 13:14:51
news-image

தப்பி பிழைக்குமா 'வல்லவன் வகுத்ததடா'..!

2024-04-10 13:32:19
news-image

குகன் சக்கரவர்த்தியார் நடித்து இயக்கும் 'வங்காள...

2024-04-10 10:51:22
news-image

டிஜிட்டலில் வெளியாகும் 'பிரேமலு'

2024-04-10 10:20:51
news-image

வைட் ரோஸ் - விமர்சனம்

2024-04-08 17:11:02