சூரியவெவ பிரதேசத்தில் பெண் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவனது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று (06) இரவு சூரியவெவ பொலிஸ் நிலையத்துக்கு சட்டத்தரணி ஒருவருடன் சென்று சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் இவர்கள் மூவரிடமும் சம்பவம் தொடர்பிலான வாக்குமூலங்களைப் பெற்று கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சூரியவெவ, வீரகம வட்டரம் வீதியில் வசித்து வந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனுடன் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி சென்றமையே கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM