(எம்.மனோசித்ரா)
கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு , இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் குறித்த தரப்பினர்களின் ஒருங்கிணைப்புடன் வெளிநாடுகளில் திறன்களை சான்றுப்படுத்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இலங்கை திறன்சார் உழைப்பு படையின் தகைமைகளை வெளிநாடுகளுடன் ஒப்புமைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் மூலம் எமது நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உயர் பெறுமதியுடனும் , கண்ணியத்துடனும் மற்றும் அதிக பொருளாதார நன்மைகளுடனும் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி வழங்க முடியும்.
அதற்கமைய சவுதியின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மற்றும் 3ஆம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் வெளிவிவகார அமைச்சின் உடன்பாடும் கிடைத்துள்ளது. அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM