வரவேற்பைப் பெற்றிருக்கும் 'கப்ஜா' படத்தின் டைட்டில் பாடல்

Published By: Ponmalar

07 Feb, 2023 | 02:29 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஹே கப்ஜா..' எனத் தொடங்கும் டைட்டில் பாடல் வெளியாகி இலட்சக் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர். சந்துரு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் 'கப்ஜா'. இதில் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா, கிச்சா சுதீப் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

ஏ. ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'கே ஜி எஃப்' படப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். சந்துரு தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடல் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் மதுரகவி எழுதி, பாடகர் சாய்சரண், பாடகி அதிதி ஆகியோர் பாடிய 'ஹே கப்சா ஹே கப்ஜா..எரிமின்னலைத் திங்குற கப்ஜா..' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலுடன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இசை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

எதிர் வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதிறன்று இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00
news-image

நடிகை அஞ்சலி நடிக்கும் 'ஈகை' பட...

2023-05-30 12:43:42
news-image

‘எல். ஜி. எம்' படத்தின் செகண்ட்...

2023-05-30 12:37:36
news-image

'வீரன்' படத்தில் நடித்ததை விட கற்றது...

2023-05-30 12:37:09
news-image

அஜித் குமாருக்கு ஜோடியாகிறாரா திரிஷா...!?

2023-05-30 12:34:40
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51