இரட்டைச் சதம் விளாசிய சந்தர்போலின் மகன் : டெஸ்ட் அரங்கில் சதமடித்த 13 ஆவது தந்தை - மகன்

Published By: Vishnu

07 Feb, 2023 | 03:01 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸிம்பாப்வே அணிக்கெதிராக ஸிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சிவ்நரைன் சந்தர்போலின் மகனான டெக்நரைன் சந்தர்போல் ஆட்டமிழக்கமால் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.

இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தந்தை -மகன் சதமடித்த 13 ஆவது சந்தர்ப்பமாக அமைந்தமை விசேட அம்சமாகும்.

தனது 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் டெக்நரைன் இப்போட்டியில் 467 பந்துகளில்  3 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கலாக 207 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். 

இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தினார். மேற்கிந்தியத்  தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே இன்னிங்ஸின் சதம் அடித்தமை  இதுவே முதல் சந்தர்ப்பமாகும். இவருடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கிரேக் பிரெவெய்ட் சதம் அடித்திருந்தார்.

மேலும், சிவ்நரைன் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை 56 ஆவது இன்னிங்ஸிலேயே பதிவு செய்திருந்தபோதிலும், அவரத மகனான டெக்நரைன் 6 ஆவது இன்னிங்ஸிலேயே சதம் அடித்திருந்தார். அத்துடன், டெஸ்ட் அரங்கில் தந்தை -மகன்  சதமடித்த 12 ஆவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.

இவ்வாறு தந்தை - மகன் சதமடித்த பட்டியல் கீழே தரப்படுகிறது.

1.  டேவ் நார்ஸ்  -  டட்லி நார்ஸ் (தென் ஆபிரிக்கா)

2. இப்திகார்  அலி கான் -  மன்சூர் அலி கான் (இங்கிலாந்து, இந்தியா)

3. வோல்ட்டர் ஹாட்லி -  ரிச்சர்ட் ஹாட்லி (நியூஸிலாந்து)

4. நஸார் மொஹமட்- முதர்ஸர் நஸார் (பாகிஸ்தான்)

5. லாலா அமர்நாத்  -  மொஹிந்தர் அமர்நாத் (இந்தியா)

6. விஜய் மஞ்சேரக்கர் சஞ்சே - மஞ்ரேக்கர் (இந்தியா)

7. ‍ ஹனீப் மொஹமட் - சொய்ப் மொஹமட் (பாகிஸ்தான்)

8. ஜெப் மார்ஷ் -  ஷோன் மார்ஷ்  (அவுஸ்திரேலியா)

9. ரொட் லெத்தம் - டொம் லெத்தம் (நியூஸிலாந்து)

10.கிறிஸ் பிரோட் -  ஸ்டுவர்ட் பிரோட் (இங்கிலாந்து)

11. கென்னத் ருத்தர்போர்ட் - ஹாமிஷ் ருத்தர்போர்ட் (நியூஸிலாந்து)

12. ஜெப் மார்ஷ் -  மிட்‍செட் மார்ஷ் (அவுஸ்திரேலியா)

13. சிவ்நரைன் சந்தர்போல்- டக்நரைன் சந்தர்போல் (மேற்கிந்தியத்  தீவுகள்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்