(என்.வீ.ஏ.)
ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்ரெய்க் ப்றத்வெய்ட், டேஜ்நரேன் சந்தர்போல் ஆகிய இருவரும் 336 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான புதிய ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
இதன் மூலம் 33 வருடங்கள் நீடித்த சாதனையை ப்றத்வெய்ட்டும் சந்தர்போலும் புதுப்பித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியின் முதல் இரண்டு நாட்டகளிலும் மழை பெய்தால் ஆட்டம் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டு மூன்றாம் நாளான நேற்றைய தினமே க்ரெய்க் ப்றத்வெய்ட்டும் டேஜ்நரேன் சந்தர்போலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான முதலாம் விக்கெட் இணைப்பாட்ட சாதனையை ஏற்படுத்தினர்.
ஷிவ்நரேன் சந்தர்போலின் புதல்வரான டேஜ்நரேன் சந்தர்போல் தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் கன்னிச் சதம் குவித்ததுடன் அதனை இரட்டைச் சதமாக்கி வரலாறு படைத்தார்.
டேஜ்நரேன் சந்தர்போல் 596 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 467 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 207 ஓட்டங்களைக் குவித்தார்.
க்ரெய்க் ப்றத்வெய்ட் 488 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 312 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 182 ஓட்டங்களைக் குவித்தார்.
இவர்கள் இருவரும் 336 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்ததன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் விற்பன்னர்களான கோர்டன் க்றீனிஜ், டெஸ்மண்ட் ஹேய்ன்ஸ் ஆகியோருக்கு 33 வருடங்களாக சொந்தமாகவிருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனை முறியடிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலேயே கோர்டன் க்றீனிஜ், டெஸ்மண்ட் ஹேய்ன்ஸ் ஆகிய இருவரும் 298 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்திருந்தனர்.
க்ரெய்க் ப்றத்வெய்ட், டேஜ்நரேன் சந்தர்போல் ஆகியோரின் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 447 ஓட்டங்களுடன் டிக்ளயார் செய்தது.
ப்றத்வெய்ட்டின் விக்கெட்டை வெலிங்டன் மஸகட்சா கைப்பற்றிய பின்னர், சுழல்பந்துவீச்சாளர் ப்றெண்டன் மவுட்டா 62 ஓட்டங்கள் இடைவெளியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அவர் 41 ஓவர்கள் வீசி 140 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே போட்டியின் 3ஆம் நாளான திங்கட்கிழமை (06) ஆட்டநேர முடிவில் 114 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM