LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின் ஒற்றுமை, நெறிமுறைகள் மற்றும் விழுமிய மதிப்புக்களைக் கொண்டாடியுள்ளது

Published By: Ponmalar

07 Feb, 2023 | 12:17 PM
image

Little Minds Strong Values (LMSV), Rotary Honda PuruduChampionship இன் இறுதிப் போட்டிகள் கடந்த 22, ஜனவரி 2023, ஞாயிற்றுக்கிழமை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வு முகநூலில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது. 

நாடு முழுவதிலுமிருந்து 4000 க்கும் மேற்பட்டசிறுவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டதுடன், இறுதிப் போட்டியில் 125 சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சரான கலாநிதி சுசில் பிரேமஜயந்த, ரோட்டரி மாவட்ட ஆளுநர் புபுது டி சொய்சா, நாடு முழுவதிலுமிருந்து ரோட்டரி கழக அங்கத்தவர்கள், சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்ததிட்டம் கொழும்பு மெட்ரோ பொலிட்டன் ரோட்டரி கழகத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோட்டரி 3220 மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கழகங்களாலும் உள்வாங்கப்பட்ட ஒரு செயல்திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

இளம் வயதிலேயே சிறுவர்களுக்கு நல்ல நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை புகட்டுவது நாட்டில் அடுத்த தலைமுறை மத்தியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்  என ரோட்டரி நம்புகிறது. 

Little Minds Strong Values ஆனது, இதுபோன்ற 30 சிங்கள, தமிழ் பாடல்களை எளிய இசை, பாடல் வரிகள் மற்றும் கண்ணைக் கவரும் வீடியோ அனிமேஷனுடன்  சிறுவர்கள் மத்தியில், இளம் வயதிலிருந்தே நேர்மறையான எண்ணங்களையும் மனப்பான்மையையும் ஊக்குவிக்கவும், எதிர்கால பிரஜைகளை தோற்றுவிக்கவும், புடம் போடவும் பயன்படுத்துகிறது.

‘Puhul Hora Karen Dane’ என்ற புகழ்பெற்ற பழமொழியானது சிறுவர்களுக்கு ‘Hora karannaepa’ (களவு செய்யவேண்டாம்), ‘borukiyannaepa’(பொய் கூற வேண்டாம்) போன்ற ஒரு சக்திவாய்ந்த செய்தியுடன் பாடல் வடிவமாக மாற்றப்பட்டுள்ளதுடன், மேலும் அனைத்து பாடல்களும் சக்திவாய்ந்த செய்திகளையும் உட்பொதிக்கப்பட்ட விழுமிய மதிப்புகளையும் கொண்டுள்ளன.

ஒவ்வொரு படைப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக இருந்ததால் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது நடுவர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது.

நிகழ்வின் வெற்றியாளர்கள்:

- பாலர் பாடசாலை தனிப்பாடல் பிரிவு வெற்றியாளர்: கண்டியைச் சேர்ந்த சகித்மாதுல்தினி வழங்கிய தினசரி நல்ல பழக்கங்களைக் காண்பித்தல் 

- பாலர் பாடசாலை குழுப் பிரிவு வெற்றியாளர்: யாழ்ப்பாணத்தில் இருந்து Foundation of Goodness வழங்கிய ‘Eka MawakageDaruwo’(ஒருதாயின்  பிள்ளைகள்) நடனம்

- ஆரம்பப் பாடசாலை தனிப் பிரிவு வெற்றியாளர்: குருநாகலைச் சேர்ந்த துலத் சந்தரு வழங்கிய படிப்பின் முக்கியத்துவம் பற்றிய பேச்சு

- ஆரம்பப் பாடசாலை குழுப் பிரிவு வெற்றியாளர்: கம்பஹாவிலிருந்து மினுவாங்கொடை, ஹொரகஸ்முல்லஆரம்ப பாடசாலை வழங்கிய ‘Gas Kolang’ இன் முக்கியத்துவம் பற்றிய நடனம். 

- மேல்நிலைப் பாடசாலை தனிப் பிரிவு வெற்றியாளர்: நுவரெலியாவைச் சேர்ந்த எஸ்.ஹஸ்மிதா வழங்கிய டெங்குவைத் தடுப்பது எப்படி என்ற உரை.

- மேல்நிலைப் பாடசாலை குழுப் பிரிவு வெற்றியாளர்:  கம்பஹா திருச் சிலுவைக் கல்லூரி வழங்கிய ‘Eka MawakageDaruwo’(ஒருதாயின் பிள்ளைகள்) பாடல்

LMSV என்பது கொழும்பு மெட்ரோ பொலிட்டன்  ரோட்டரி கழகத்தின் செயல்திட்டத் தலைவரான ருக்ஷான் பெரேரா அவர்களின் சிந்தனையில் உதித்ததுடன், இந்த நிகழ்வைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களையும் நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், மிகவும் பெருமைப்படுகிறேன். சிறுவர்கள் இந்தப் பாடல்களை நல்ல விழுமியங்களுடன் எவ்வளவு சிறப்பாக மாற்றியமைத்து, உட்பொதிக்கப்பட்ட விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான படைப்புக்களை வெளிக் கொண்டுவந்துள்ளனர் என்பதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஐந்தாண்டுகளில் இதுபோன்ற 50க்கும் மேற்பட்ட சிறந்த பழக்கவழக்க விழுமியங்களை இந்தப் பாடல்கள் மூலமாகக் கற்பித்து, ஒழுக்கம் நிறைந்த பண்பியல்புகளை உருவாக்கி, வாழ்க்கைச் சூழ்நிலைகளில் பிற மதங்களையும், இனங்களையும் மதித்தல், பெற்றோரையும், வயதுக்கு மூத்தவர்களையும் மதித்தல், பிறரிடம் அன்பாக இருத்தல், நேர்மையாக இருத்தல், களவுசெய்யாமை, பொய் சொல்லாமை, மன்னிப்புக் கேட்டல், நன்றிகூறுதல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், குப்பைகளை பொறுப்புணர்வுடன் அப்புறப்படுத்தல், இலஞ்சம் வாங்குதலை, கொடுத்தலை மறுத்தல், சட்டத்தை பின்பற்றுதல், வீதி ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல், ஆரோக்கியமாக இருத்தல்... போன்றவை புகட்டப்பட்டதுடன், இந்த விழுமிய மதிப்புகள் எதிர்கால சந்ததியினரிடமும் காணப்படும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார். 

2022 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் உதவியுடன், நாடுமுழுவதும் உள்ள 10,000 அரசாங்க பாடசாலைகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் அவர்களின் சமூகங்களில் விழுமிய மதிப்புகளை ஊக்குவிப்பதற்காக பாடசாலை நிகழ்வுகளில் இந்தப்  பாடல்கள் இடம்பெற்று, அப்பாடசாலைகள் ஏற்கனவே தேசிய ரீதியிலான கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்நிகழ்வு குறித்து ரோட்டரிக் கழகம், கொழும்பு மெட்ரோ பொலிட்டனின் தலைவரான திலினி ஹென்நாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “வெற்றியாளர்களுக்கான சிறப்பான விருதுகளுடன் பாடல்களை, மதிப்புகளைக் கற்றுக்கொள்ள சிறுவர்களை மேலும் ஊக்குவிக்கவும் ‘Rotary Honda Purudu Champions’ என்ற தேசிய மட்டத்திலான போட்டியுடன் செயல்திட்டத்தை மூன்றாம் கட்டத்திற்கு எடுத்துச் சென்றமைக்காக, LMSV இன் பின்னால் உள்ள ருக்ஷான், ரோட்டரி அங்கத்தவர்கள் மற்றும் அவரது அணிக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களும், சிறுவர்களும் அருமையான நிகழ்வுகளைப் படைக்க எவ்வளவு முயற்சி செய்துள்ளார்கள்  என்பதைக் காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, பாடசாலைகள் பயன்படுத்திய பாத்திர வடிவமைப்பு அலங்காரங்கள் மற்றும் ஆடையணிகள் வியப்பூட்டுவதாக இருந்தது. கம்பஹாவைச் சேர்ந்த பாடசாலை ஒன்று ‘Gas Kolang’ பாடலுக்கு நடனமாடி, 20 அடி நீளம் 8 அடி உயரம் கொண்ட திடமான அரங்க பின்னணியைக் கொண்டுவந்தது. அது ஒரு சிறுவர் மரத்தில் தொங்குவது போன்ற உண்மையான ஊஞ்சலாக காட்சியளித்ததுடன், நிகழ் நேரத்தில் முன்னும் பின்னுமாக அந்த ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது. எங்களிடம் மிகவும் திறமையான இளைஞர், யுவதிகள் உள்ளனர். எங்கள் நாட்டில் சிறந்த நேர்மறை உள்ளமையை நான் காண்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்விற்கான நடுவர்களாக பங்குபற்றிய நடிகர்கள், பாடகர்கள், பொழுதுபோக்கு கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் மதிப்பீட்டுடன் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் சங்கீதா வீரரத்ன, நடிகை நிரஞ்சனி ஷண்முகராஜா, நடிகை தனு(சுனாமி), தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மிஷேல் தில்ஹாரா, தொலைக்காட்சி நடிகை மற்றும் ஆர்வலர் ஜூடி  டி சில்வா, பாடகர் அபிகாயில், இசையமைப்பாளர் மற்றும் அயோமா பெர்னாண்டோ, பாலர் பாடசாலைஅதிபர், பாடகி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில நிகழ்ச்சிகளின் பாடல் நடனங்கள், பேச்சுக்கள் மற்றும் நாடகங்களை அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் அசல் பாடல் வீடியோக்கள் அல்லது சிறுவர்களின் நேரடி நிகழ்ச்சிகளை WWW.LMSV.LK மூலமாக கண்டு களிக்கலாம். இந்தப் பாடல்களை இரசிக்கும்போது இந்த விழுமிய மதிப்புகளைக் கற்றுக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்.

நாம் வளரும் ஆண்டுகளில் நாம் கற்றுக்கொள்வது நமது நம்பிக்கைகளை வடிவமைக்கிறது மற்றும் நாம் வயதுவந்தவுடன் நமது செயல்களை பாதிக்கிறது. இந்தத் திட்டம் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி ஆகியவற்றின் இலாப நோக்கற்ற ஒரு பரிசு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கான நேரடி முதலீடாகும். நாம் அனைவரும் ஏங்கித் தவிக்கின்ற மற்றும் அதற்காக உழைக்கின்ற வகையில், வரும் ஆண்டுகளில் இது முழு தேசத்தையும் நாம் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுடன் ஆசீர்வதிக்கும் பலனைத் தரும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயற்கையும் புதுமையும் கலையும் கலந்த 'இன்னொரு...

2023-03-24 12:28:14
news-image

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு!

2023-03-24 13:49:34
news-image

நல்லூர் நீர்வள உரையாடல்

2023-03-24 13:47:47
news-image

சிலுவைப்பாதை

2023-03-24 10:07:29
news-image

உலக காசநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு...

2023-03-23 16:54:12
news-image

சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின்...

2023-03-23 15:38:21
news-image

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும்...

2023-03-23 16:36:26
news-image

இராகலையில் அகவை பூர்த்தி விழாவும் மலர்...

2023-03-23 16:07:35
news-image

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முப்பெரும்...

2023-03-22 17:23:59
news-image

நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய...

2023-03-22 17:03:57
news-image

உலக நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு...

2023-03-22 15:44:32
news-image

ஹமீத் அல் ஹுசேனி தேசிய கல்லூரியின்...

2023-03-22 13:57:07