6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட இப்திகார் அஹமட்

Published By: T. Saranya

07 Feb, 2023 | 11:25 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் கண்காட்சிப் போட்டியொன்றில் குவாட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய இப்திகார் அஹமட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

பாகிஸ்தானின் புக்டி மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இப்போட்டியில் குவாட்டா கிளேடியேட்டர்ஸ் அணியை பெஷாவர் ஸெல்மி அணி எதிர்த்தாடியிருந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குவாட்டா கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 184 ஓட்டங்களை குவித்தது. 

இந்த இன்னிங்ஸின் 20 ஆவது ஓவரை வஹாப் ரியாஸ் வீசியிருந்தார். இவரின் பந்துவீச்சை எதிர்கொண்ட இப்திகார் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை  பறக்கவிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

இப்போட்டியில் 42 பந்துகளில் அரைச் சதம் அடித்திருந்த இப்திகார் அஹமட் ‍இன்னிங்ஸ் நிறைவின்போது 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களை குவித்திருந்தார். 

பதிலுக்துத் துடுப்பெடுத்தாடிய பெஷாவர் ஸெல்மி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 181 ஓட்டங்களை குவித்து 3 ஓட்டங்களால் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்