நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் தைப்பூசத்தினை முன்னிட்டு தேர்பவனி சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது விநாயகர் வழிபாடு, திரவிய அபிசேகம், அலங்காரபூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமானின் வீதி உலாவும் இடம்பெற்றது.
இந்த தேர் பவனி அட்டன் சிவ சுப்பிரமணிய தேவஸ்த்தானத்தில் ஆரம்பித்து ஹட்டன் சுற்றுவட்ட வீதி ஊடாக பண்டாரநாயக்க டவுன் வரை சென்று மீண்டும் திரும்பி பிரதான வீதி ஊடாக மல்லியைப்பூ சந்தி வரை சென்று ஆலயத்தினை வந்தடைந்து.
நீண்ட இடைவெளிக்கு பின் இடம்பெற்ற இந்த தேர் பவனியில் காவடி, பரவக் காவடி உள்ளிட்ட கலை கலாசார அம்சங்களும் இடம்பெற்றன.
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ சந்திராநந்த சர்மா ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர் பவனியில் பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM