நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

Published By: Digital Desk 3

07 Feb, 2023 | 08:56 AM
image

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்

கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ. அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமானதாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05