சிலநாட்களிற்கு முன்னர்தான் நான் சிறுநீரக சத்திரகிசிச்சை செய்துகொண்டேன் நான் தற்போது மழையில் நனைகின்றேன் எனது கால்கள் ஈரத்தில் நனைகின்றன என தெரிவித்த அவர் நான் மட்டுமல்ல முதியவர்களான நோயாளிகளும் ஜக்கெட்கள் சப்பாத்துக்கள் எதுவுமின்றி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
-
பிபிசி
அதிகாலை 4.17 எர்டெம் துருக்கியின் தென்பகுதியில் உள்ள கார்ஜியான்ஸ்டெப்பில் உள்ள தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். துருக்கி தனது வரலாற்றில் சந்தித்த பாரிய பூகம்பம் உறக்கத்திலிருந்த அவரை நடுங்கவைத்தது.
எனது நாற்பது வருடவாழ்நாளில் நான் இவ்வாறான ஒன்றை எதிர்கொண்டதில்லை என தெரிவிக்கும் அவர் மூன்று தடவை வீடு ஆடியது தொட்டிலில் உள்ள குழந்தை போல எங்கள் நிலை காணப்பட்டது என தெரிவித்தார்.
சேதமடைந்த கட்டிடங்களி;ல் இருந்து தப்புவதற்காக மக்கள் தங்கள் வாகனங்களை நோக்கி ஒடினர் .
எங்கள் பகுதியில் ஒருவர் கூட தனது வீட்டில் இல்லை என கருதுகின்றேன் என எர்டெம் தெரிவித்தார்.
நகரத்;தின் மருத்துவமனையில் சிறுநீரக மாற்றுசத்திரசிகிச்சையிலிருந்து மீண்டுகொண்டிருந்த கொக்சே பே தனது கையிலிருந்த சலைனை அகற்றிவிட்டு ஏனைய நோயாளிகளிற்கு உதவிக்கொண்டிருந்தார்.
சிலநாட்களிற்கு முன்னர்தான் நான் சிறுநீரக சத்திரகிசிச்சை செய்துகொண்டேன் நான் தற்போது மழையில் நனைகின்றேன் எனது கால்கள் ஈரத்தில் நனைகின்றன என தெரிவித்த அவர் நான் மட்டுமல்ல முதியவர்களான நோயாளிகளும் ஜக்கெட்கள் சப்பாத்துக்கள் எதுவுமின்றி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
அடனா நகரில் தங்கள் ஐந்து தள தொடர்மாடியை பூகம்பம் உலுக்கியவேளை தங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் கொல்லப்படுவோம் என கருதியதாக நிலுபர் அஸ்லான் தெரிவித்தார்.
நான் எனது வாழ்நாளில் இப்படியொன்றை ஒருபோதும் சந்தித்ததில்லை நாங்கள் ஒருமணிநேரத்திற்கு மேல் அங்குமிங்கும் தள்ளப்பட்டோம் என்றார் அவர்
இது பூகம்பம் ஆகக்குறைந்தது நாங்கள் அனைவரும் ஒன்றாக இறப்போம் என நான் எனது குடும்பத்தினருக்கு தெரிவித்தேன் எனது மனதில் அதுவே தோன்றியது என்கின்றார் அவர்.
பூகம்பம் கடந்ததும் அவர் வெளியே தப்பிஓடினார்- என்னால் எதனையும் எடுத்துவரமுடியவில்லை நான் செருப்புடன் நிற்கின்றேன் என்னை சுற்றி நான்கு கட்டிடங்கள் தரைமட்டமாகிவிட்டன என்றார் அவர்
டியாபக்கீரில் மக்கள் மீட்பு பணிகளிற்கு உதவுவதற்காக வீதிக்கு ஓடினர்.
எங்கும் அலறல் சத்தம் -நான் எனது கைகளால் கற்களை இடிபாடுகளை அகற்றினேன்,நண்பர்களுடன் சேர்ந்து காயமடைந்தவர்களை அகற்றினோம்;,அதன் பின்னர் மீட்பு பணியினர் வந்தனர் என 30 வயது நபர் ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.
அந்தநகரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழுபேர் இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளனர் என முகிட்டின் ஒராக்கி என்பவர் தெரிவித்தார்.
எனது சகோதரியும் மூன்று பிள்ளைகளும் அவரது கணவரும் அவரின் குடும்பத்தவர்களும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
சிரியாவில் அலெப்போவில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன மருத்துவமனைக்கு மக்களை அலையலையாக பெருமளவில் கொண்டுவருகின்றனர் என சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
பாரிய பூகம்பத்தின் பின்னரான சிறிய அதிர்வுகளும் கடும் குளிரும் நிலைமையை மோசமாக்கியதாக மலட்டயாவில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார்.
கடும் குளிராக உள்ளது பனிபொழிகின்றது அனைவரும் வீதியில் உள்ளனர் மக்கள் என்னசெய்வது என அறியாது குழம்பிப்போயுள்ளனர் என பிபிசிக்கு தெரிவித்த அவர் எங்களின் கண்களின் முன்னால் பாரிய அதிர்விற்கு பின்னர் ஏற்பட்ட சிறிய அதிர்வினால் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துசிதறின என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM