சிரியாவில் பூகம்பம் தாக்கிய குர்திஸ் பகுதிகளில் தங்கள் குடும்பத்தவர்களின் நிலை குறித்து அறிவதற்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டுள்ள தனது உறவுகளின் குரலிற்காக குர்திஸ் பெண் ஒருவர் வேதனையுடன்.கதறுகின்றார்.
இளம் அயலவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முயல்கின்றனர்.சில நிமிடங்களிற்கு முன்னர் தான் அவுர்கள் சிலரை மீட்டெனர் உங்கள் குடும்பத்தவர்களையும் அவர்கள் மீட்டெடுப்பார்கள் என அவர்கள் அவர்களிடம் தெரிவிக்கின்றனர்.
12தளங்களை கொண்ட தொடர்மாடியின் முதலாவது மாடியில் தனது குடும்பத்தவர்கள் வாழ்ந்ததால் அந்த முதிய பெண் எந்த நம்பிக்கைகளும் அற்றவராக காணப்படுகின்றார்.
அவர்கள் கீழே இருந்த வீட்டிலிருந்தார்கள் உறக்கத்திலிருந்தார்கள் அவர்களை யாராலும் சென்றடைய முடியுமா என்பது எனக்கு தெரியாது மிகவும் குளிராக உள்ளது என குழந்தைகள் குளிரால் உறைந்துபோவார்கள் என அவர் தெரிவிக்கின்றார்.
கடும் குளிர் மழை தொடர்ச்சியான சிறிய பூகம்பங்கள் போன்றவற்றால் எவராலும் தங்கள் வீடுகளிற்கு அருகில் செல்ல முடியவில்லை.
அவர்கள் தங்களை வீடுகளை விட்டு வீதிக்கு நள்ளிரவில் ஓடிவந்த போதிலும் தங்கள் உடமைகளை எடுப்பதற்காக செல்வதற்கு அவர்கள் அஞ்சுகின்றனர்.
டியர்பக்கிர் என்ற பகுதியில் ஆகக்குறைந்தது7 கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM