(நெவில் அன்தனி)
இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 76ers அணியும் ஓல்ட் கேம்ப்றியன்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
இலங்கை கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் 30, 35, 40, 45 ஆகிய வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை (04), ஞாயிற்றுக்கிழமை (05) ஆகிய தினங்களில் நடைபெற்றன.
கஜா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
5 அணிகள் பங்குபற்றிய 45 வயதுக்கு மேற்பட்ட குழுவில் நேட்ஸ் க்றே, ஓல்ட் பென்ஸ், நெட்ஸ் பின்க், ஓல்ட் தேவன்ஸ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு குழுவில் தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றது.
76நசள அணியிடம் மாத்திரம் தோல்வி அடைந்த நெட்ஸ் பின்க் அணி மற்றைய போட்டிகளில் வெற்றிபெற்று குழுவில் 2ஆம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் குழு பியில் இடம்பெற்ற வத்தளை கூடைப்பந்தாட்ட சங்க அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதலாம் இடத்தையும் ஓல்ட் கேம்ப்றியன்ஸ் 3 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும் பெற்று அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
குழு ஏயில் இடம்பெறும் மட்டக்களப்பு மைக்ஸ் அணி அடுத்த வார இறுதியில் தனது லீக் சுற்றை நிறைவு செய்த பின்னர் அக் குழுவிலிருந்து அரை இறுதிக்கு தெரிவாகும் 2 அணிகள் தீர்மானிக்கப்படும்.
30 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 35 வயதுக்கு மெற்பட்ட ஆண்களுக்கான போட்டிகள் அடுத்த வார இறுதியில் நிறைவடைந்த பின்னர் இறுதிச் சுற்றில் விளையாடவுள்ள அணிகள் தீர்மானிக்கப்படும்.
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கு 30 வயதுக்கு மேற்பட்ட, 35 வயதுக்கு மேற்பட்ட, 40 வயதுக்கு மேற்பட்ட, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான போட்டிகளும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டிகளும் பெப்பரவரி 11, 12ஆம் திகதிகளில் நடைபெறும். சகல பிரிவுகளுக்குமான இறுதிப் போட்டி 13ஆம் திகதி நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM