சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Published By: T. Saranya

06 Feb, 2023 | 04:53 PM
image

(எம்.மனோசித்ரா)

டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலின் போது, மக்களைத் தூண்டும் வகையில் காணொளிகளை பதிவேற்றியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய வாக்குமூலத்தை உதாசீனப்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் விமான நிலையத்தில் குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர் கடந்த ஆண்டு மே 31 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்துள்ளார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக கடந்த ஜனவரி 20 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் , அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

அதற்கமைய குற்றப்புலனாய்வு பிரிவு தர்ஷன ஹந்துன்கொட நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வெளிநாட்டு பயணத்தடையைப் பெற்றுக் கொண்டது. எவ்வாறிருப்பினும் தர்ஷன ஹந்துன்கொட நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் பயணத்தடையை மீறி வெளிநாடு சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பிய அவர் குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

சமாதானம், நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச்...

2023-03-23 15:59:03